சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்)
Share
சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்)
Sambar saadham recipe in Tamil - Bisebelebath,South Indian sambar rice
தேவையானவை
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
புளித்தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
உப்பு
முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
அவரைக்காய்
உருளைகிழங்கு
கேரட்
பீன்ஸ்
பட்டாணி
கத்தரிக்காய்
காளிஃப்ளவர்
சவ்சவ்
வாழைக்காய்
(அனைத்தும் சேர்ந்து 3 கப்)
தாளிக்க
வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
நெய் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடிக்க
வரமிளகாய் - 14
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
ஏலக்காய் - 1
கறிவேப்பிலை
(1/2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து பொடிக்கவும்)
Method
சாம்பார் சாதம் (பிஸிபேளாபாத்) செய்முறை
அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைக்கவும்.
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்கள் அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கலக்கவும்.
அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கலந்து, புளித்தண்ணீர் மற்றும் 10 கப் தண்ணீர் சேர்த்து,
உப்பும் சேர்த்து கலந்து மூடி வைத்து 6 விசில் வரை விடவும்.
கடாயில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து
கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், குக்கரில் உள்ள சாதத்துடன் கலந்து, மல்லித்தழை தூவி வைக்கவும்.
அப்பளம் அல்லது சிப்ஸ் நல்ல combination. இது செய்வதற்கு சுலபமானது. சுவையும் நன்றாக இருக்கும்.
சாதத்துக்கு சேர்ப்பதைப்போல தண்ணீர் இரண்டு மடங்கு சேர்க்க வேண்டும்.
எல்லா காய்களும் சேர்க்கலாம்.
Tags
sambar sadam recipe,sambar rice recipe,hotel style sambar sadam,
how to make sambar sadam,South indian lunch recipes,குக்கரில் சாம்பார் சாதம் செய்முறை
புளியோதரை சாதம் செய்வது எப்படி, பாசுமதி அரிசி - தக்காளி சாதம்
தயிர் சாதம் செய்வது எப்படி, எலுமிச்சை சாதம் செய்வது எப்படி
Hits: 15745, Rating : ( 5 ) by 1 User(s).